என் பேச்சு புரிகிறதா?... ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்களைப் பார்த்து கேட்ட கேப்டன் விஜயகாந்த்!
என் பேச்சு உங்களுக்குப் புரிகிறதா ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்களைப் பார்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : என் பேச்சு உங்களுக்குப் புரிகிறதா நல்லவர்களான மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
நியாய விலைக்கடையில் சர்ச்சரை விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது : என்னுடைய பேச்சு உங்களுக்குப் புரிகிறதா, நல்லவர்களாகிய மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் புரியாது.

சசிகலா உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள், இது மட்டும் போதாது அமைச்சர்கள், ஓபிஸ், ஈபிஎஸ் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினால் தான் ஏழை மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் நல்ல நடிகர்கள்.
தமிழகத்தில் எங்கு மாநில சுயாட்சி இருக்கிறது, திமுக தான் முதன்முதலில் ஊழலுக்கு வழிவகுத்தது அதன் வழியை பின்பற்றி தான் அதிமுக இன்று ஊழலின் உச்சமாக இருக்கிறது. ரேஷன் கடைகளில் மசூர் பருப்பை போடுகிறார்கள், இந்த மசூர் பருப்புகளை அமைச்சர்களையோ, ஆட்சியாளர்களையோ சாப்பிடச் சொல்லுங்கள் பார்க்கலாம். சர்க்கரை விலையை ஒரு ரூபாய், 2 ரூபாய் என்று 5 ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினாலும் பரவாயில்லை. ஆனால் ஒரேயடியாக ஒரு கிலோ ரூ. 13 ஆக இருந்த சர்க்கரை விலையை ஒரேயடியாக ரூ. 25 ஆக உயர்த்தியுள்ளனர்.

மக்களுக்கு ஸ்லோபாய்சன் போல விலைஏற்றத்தை கொடுங்கள், அதை விட்டு ஒரேயடியாக ரூ. 12ஐ ஏற்றியுள்ளனர். இதன் பெயர் தான் நியாயவிலைக்கடையா, மக்கள் ரேஷனுக்குப் போகக்கூடாது பருப்பு, சர்க்கரை வாங்கக் கூடாது என்பது தான் அரசின் திட்டம். ஜிஎஸ்டி நல்லது தான், ஆனால் போடவேண்டிய அளவு தான் போட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று விஜயகாந்த் பேசினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications