இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா.. விஜயகாந்த் பொளேர் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உளறிக்கொட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ- வீடியோ

  சென்னை : தமிழக அரசு நிதி கேட்பது மக்களுக்கு உதவி செய்ய அல்ல, அரசியல்வாதிகளுக்கு நிதி ஒதுக்கிக் கொள்ளவே என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

  சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். பள்ளிக்கரணை ஏரிப் பகுதிக்கு வந்த அவரை கட்சியின் நிர்வாகிகள் தோளில் கைபோட்டு அழைத்து வந்தனர். அவருடன் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் வந்திருந்தார்.

  ஏரி நீர் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மன்மோகன்சிங் என்று சொல்கிறார், அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு முதல்வர் யார் என்று சொல்கிறார் என்று தெரியும். இதனால் தான் ஜெயலலிதா இவர்களையெல்லாம் பேசவிடாமல் வைத்திருந்தார்.

   கருணாநிதி - மோடி சந்திப்பு

  கருணாநிதி - மோடி சந்திப்பு

  பிரதமர் மோடி ஏற்கனவே சென்னை வந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூத்த பத்திரிக்கையாளர் சோவை சந்தித்துள்ளார். எனவே திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடியின் சந்திப்பை அரசியலாக்கத் தேவையில்லை. மூத்த அரசியல்வாதி என்கிற ரீதியில் அவர் சந்தித்துவிட்டு சென்றிருக்கார்.

   மக்களுக்காக இல்லை

  மக்களுக்காக இல்லை

  தமிழக அரசு வடகிழக்குப் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்காக நிதி ஒதுக்கவில்லை, அவர்களுக்குத் தான் நிதி ஒதுக்கிக் கொள்கிறார்கள். அதற்காகத் தான் இப்போது ரூ. 1500 கோடி நிதி அரசிடம் கேட்கிறார்கள்.

   விஜயகாந்த் கேள்வி

  விஜயகாந்த் கேள்வி

  தூர்வார தமிழக அரசு ஒதுக்கியதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் எங்கே போனது? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே தெரியும். அதைத் தான் நேற்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கேட்டோம். மொத்தத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தான் நிதி ஒமுக்கிக் கொள்கிறார்கள்.

   கட்சி தொடங்கினால் வரவேற்கிறேன்

  கட்சி தொடங்கினால் வரவேற்கிறேன்

  நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கட்டும் அதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். அவர் கூட மேலும் 10 பேர் கட்சி தொடங்க வந்தால் அதையும் வரவேற்பேன். அவர் முதலில் கட்சியை தொடங்கி மக்களின் அபிமானத்தை பெறட்டும் அதன் பிறகு கூட்டணி வைப்பதை பற்றி பேசலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMDK Chief Vijayakanth says government is seeking fund not to help for people but to get fund for politicians

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற