தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி !
சென்னை: தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் ர் கட்சியின் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக இணைப்பு அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் கட்சிக்கே களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும்,

கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால், அவர் வகித்து வந்த பேரவை தொழிற் சங்க செயலாளர் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.
இவருடன் பேரவை தொழிற் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications