ஜன 5ல் கூடுகிறது தே.மு.தி.க. பொதுக்குழு: கூட்டணி அறிவிப்பு வெளியாகும்?
சென்னை: விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 5ம் தேதி பொன்னேரியில் உள்ள எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சித் தலைவர் விஜயகாந்த் கேட்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவேன் என்றும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் கருத்து கேட்டுத்தான் இறுதி முடிவு அறிவிப்பேன் என்றும் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் கூறி இருந்தார்.

இந்த சூழலில் கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிவதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழுவை விஜயகாந்த் கூட்டி பேச உள்ளார்.
இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க.வும், பாரதீய ஜனதா கட்சியும் முயற்சி எடுத்து வருகிறது. காங்கிரசும் தூது விடுகிறது. ஆனால் எந்த கட்சியிடமும் பிடி கொடுக்காமல் விஜயகாந்த் உள்ளார்.
ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு சில மாதங்களிலேயே கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்க முடியாமல் போனதுடன் கட்சியிலும் சிலரை இழக்க நேரிட்டது.
எனவே மீண்டும் வேறொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது, இதேபோல் ஒரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். அதனால் தான் எனது தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பேன் என்று ஏற்கனவே விஜயகாந்த் அறிவித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜனவரி 5-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி அவர் எடுக்கும் முடிவை அறிய பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆவலுடன் உள்ளனர்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பொதுக்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டினை அறிவித்து விட்டனர். காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி அமைப்போம் என்று திமுக கூறி வருகிறது. அதேபோல அதிமுகவும் தனித்துப் போட்டி என்று கூறிவிட்டது.
தேசியக் கட்சியான பாஜகவோ அதிமுக, திமுக அல்லாத கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறது. தேமுதிக விற்கு டிமாண்ட் அதிகரித்து வருவதால் அவரது முடிவினை திமுகவும், பாஜகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications