முதல்வர் ஜெயலலிதா பற்றி பேஸ்புக்கில் அவதூறு: தேமுதிக கவுன்சிலர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேமுதிக நகர செயலாளராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக சித்தரித்து செய்தி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கடந்த 3 தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேட்டுப்பாளையம் அதிமுக நகர செயலாளர் வான்மதிசேட் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேஸ்புக்கில் அவதூறாக செய்தி வெளி யிட்டு அவரது நற்பெயருக்கும் நல்லாட்சிக்கும் களங்கம் விளைவித்த மேட்டுப்பாளையம் தேமுதிக நகர செயலாளர் சுப்ரமணியை கைது செய்ய வேண்டும்‘ என குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுகவினரின் புகாரை அடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேமுதிக நகர செயலாளர் சுப்ரமணி மீது வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்ரமணியத்தை தனிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்து கோவை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சுப்பிரமணியை 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், கோவை மாவட்ட அதிமுக தொழிற்சங்க இணை செயலாளர் மைதானம் சந்தானம் என்பவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications