மதுவிலக்கு கோரி கைதான விஜயகாந்த், பிரேமலதா விடுதலை.. தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. வினர் விடுவிப்பு
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்தி கைதான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் கைதான தே.மு.தி.க. வினரும் விடுவிக்கப்பட்டனர்.
மது விலக்கு கோரி இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து, அனுமதி கோரி அக்கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வன்முறை ஏற்பட்டால் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் என எச்சரித்தார்.
பிற்பகலில் மீண்டும் நடைபெற்ற இறுதி விசாரணையில் மனித சங்கிலி போராட்டத்திற்கு நீதிபதி அனுமதி மறுத்தார்.காவல் துறையும், நீதிமன்றமும் அனுமதிக்காத நிலையில், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் விஜயகாந்த், உட்பட மனித சங்கிலியில் ஈடுபட்டவர்களை இன்று மாலை 4.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிரேமலதா மற்றும் மகளிரணியினரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும், கோயம்பேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனுமதியின்றி மனித சங்கிலியில் ஈடுபட்ட தே.மு.தி.க. வினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இரவில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications