மாணவர்களைப் பற்றி கவலைப்படாத அரசால் ஒரு உயிர் போயுள்ளது... விஜயகாந்த் கண்டனம்
தமிழக அரசின் மெத்தனமாக செயல்பட்டதாலேயே மருத்துவ படிப்பை படிக்க முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அரியலூர்மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார்.

அவர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தும், நீட் தேர்வு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக அந்த மாணவி உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு, தமிழக அரசின் மெத்தனமான செயல்பாட்டால்,மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
மாணவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பதவியும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதில் தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவு, இன்று ஒருஉயிர் பறிபோயுள்ளது. நீட் தேர்வை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறித்தி இருந்தால், இதுபோன்று தற்கொலை ஏற்பட்டிருக்காது.
மேலும் அனிதாவைப் போல சிறு வயது முதலே மருத்துவக் கனவுடன் படித்து வந்த மாணவ ,மாணவிகளின் கனவை செயலற்ற தமிழக அரசு மாணவ மாணவிகளின் கனவை சிதைத்து விட்டது. அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
நினைத்ததை படிக்க முடியாமல் போனதற்காக தற்கொலை தீர்வு அல்ல. இது போன்ற விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நிகழ்வுகள் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications