தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் சில தொகுதிகள் மாற்றம்
சென்னை: முதுகுளத்தூர், மன்னார்குடி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய நான்கு தொகுதிகளை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் மாற்றிக் கொண்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேமுதிக 104 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும் தமாகா 26 தொகுதிகளிலும், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிப்பங்கீடுகள் முடிவடைந்து,யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தையும் முடிவடைந்து விட்டது. தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலும் பல கட்டங்களாக வெளியாகி வருகிறது. மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்ட தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே செய்துகொண்ட உடன்பாட்டின்படி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் (212) சட்டமன்ற தொகுதி மதிமுகவிற்கும், மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி (167) சட்டமன்ற தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி (080) சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் (072) தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications