ஜெ. போட்டியிட பதவி விலகுவது நான் செய்த புண்ணியம்... உருகும் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.
மதுரை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களின் முதல்வர் அம்மா தலைமையில் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து மக்களை சந்தித்தது. மதுரை மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.
விஜயகாந்த் உள்ளிட்ட 26 பேரையும் வெற்றி பெற செய்தவர் அம்மா. அந்த நன்றியை மறந்து விஜயகாந்த் செயல்பட்டார். அவரது செயல்பாடு பிடிக்காததால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம்.
சூழ்ச்சியாளர்களின் சதி வலைகளை அம்மா தகர்த்தெறிந்து விட்டார். அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார்.
அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வசதியாக நான் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். இதுகுறித்து நேற்று அம்மாவை நேரில் சந்தித்து எனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறேன்.
எனக்கு இந்த பதவியை பெற்று தந்தது அவர்தான். அவருக்காக பதவி விலகுவது தான் நான் செய்த புண்ணியமாக கருதுகிறேன்.
இவ்வாறு சுந்தரராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.












Click it and Unblock the Notifications