விஜயகாந்துக்கு மாலை, சால்வை அணிவிக்கத் தடை!
சென்னை: தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வரும் நிர்வாகிகள் யாரும் தலைவர் விஜயகாந்திற்கு மாலையோ, சால்வையோ அணிவிக்கக் கூடாது என தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் ஜூன் 4-ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2014 லோக்சபா தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் ஆகியோர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கழக தலைவர் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார்.
எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட அறிவிப்பை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நிர்வாகிகளும் பின்பற்றி ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications