19 தொகுதிகள் கேட்கும் தேமுதிக- அதிர்ச்சியில் பாஜக!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக 19 தொகுதிகளைக் கேட்பதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவற்றை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் மதிமுக, பாஜக அணியில் இணைவதாக அறிவித்தது.
ஆனால் தேமுதிக, பாமக ஆகியவை எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் தொகுதிப் பங்கீட்டு சிக்கல்தான் எனக் கூறப்படுகிறது.குறிப்பாக தேமுதிகவின் பிடிவாதம்தான் பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்.

19 தொகுதிகள் தேவை!
தேமுதிக தரப்பில் மொத்தம் 19 தொகுதிகள் கேட்கப்பட்டதாம்.

11 ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்
இதற்கு பாஜக தரப்பில் 11 ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிடிவாதம்
ஆனால் 19 தொகுதிகள்தான் முதலும் கடைசியும் என திட்டவட்டமாகவே தேமுதிக தெரிவித்துவிட்டதாம்.

மதிமுக- பாமகவுக்கு சிக்கல்
இப்படி 19 தொகுதிகளை தேமுதிக கேட்டால் நிச்சயமாக பாமக, மதிமுகவுக்கு அந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாது.

கழற்றிவிட சொல்கிறாரோ?
ஒருவேளை பாமக- மதிமுக இல்லாமல் தேமுதிக- பாஜக மட்டும் கூட்டணி அமைத்தால் போதும் என்று விஜயகாந்த் நினைக்கிறாரோ என்ற சந்தேகமும் பாஜகவுக்கு இருக்கிறதாம். இந்த விவகாரத்தில்தான் வைகோவும் முறைத்துக் கொண்டு மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications