மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, தமாகாவை இணைக்க பேச்சுவார்த்தை: நல்லக்கண்ணு
சென்னை: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக, தமாகா கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. மக்கள் நலக்கூட்டணி தலைவர் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையிலும், கூட்டணியை வலுப்படுத்த மேலும் பல கட்சிகளை இணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விருதுநகருக்கு வந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்கு முன்பிருந்தே மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை மாநாட்டுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது என்று கூறிய அவர், குறைந்தபட்ச செயல் திட்டத்தில் மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மக்களிடம் எடுத்து சொல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்குப் பின்பும் தொடரும். எங்களது கூட்டணியில் சேருவது தொடர்பாக தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைவர்கள் கூடி விரைவில் முடிவு செய்வார்கள் என்றும் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் பலத்த மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பலத்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன.
இதற்காக மத்திய அரசிடம் ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசு ரூ.1,700 கோடி தருவதாக அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவான தொகை. அரசு கோரிய முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அரசு சுமூக தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் மட்டுமே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க கெயில் முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, தமாகா இணையுமா? பொருத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications