மனைவியை சுயேச்சையாக நிற்க வைத்த திமுக பிரமுகர்.. இரவில் தங்க காயின் பரிசு.. வாக்காளர்கள் பேரதிர்ச்சி
ஆம்பூர்: ஆம்பூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி நள்ளிரவில் வாக்காளர்களுக்கு தங்க காயின் எனக்கூறி மோசடி செய்ததாக திமுக வேட்பாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவரையும் அவரது மனைவியையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்றுமுன் தினம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36-ஆவது வார்டு பகுதியான கம்பிகொல்லை, பெத்லகேம் பகுதியில் அதிமுக, திமுக, சுயேச்சைகள் என மொத்தம் 5 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இவர்களில் அதிமுக சார்பில் தாமரைச்செல்வி என்பவரும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஷகிதாபானு என்பவரும் போட்டியிட்டனர். இந்த வார்டு திமுகவுக்கு ஒதுக்கப்படாமல் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக பிரமுகர் மணிமேகலை அதிருப்தியில் இருந்துள்ளதாக தெரிகிறது.

திமுக கூட்டணி
இதனால் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து மணிமேகலை இந்த தேர்தலில் குலை தள்ளிய தென்னை சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த நிலையில் மணிமேகலையின் கணவர் துரைபாண்டியன் தனது மனைவி வெற்றி பெற தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு 1000 தங்க காயின்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சுவாமி படம்
மேலும் அவர் சுவாமி படத்தை காட்டி ஒவ்வொரு வாக்காளரிடமும் தனது மனைவி மணிமேகலைக்கு வாக்களிக்க வேண்டும் என சத்தியம் செய்து கொண்டாராம். தான் கொடுத்த தங்க காயினை தேர்தல் முடிந்த பிறகு அடகு வைப்பதோ விற்று பணம் பெற்றுக் கொள்வதோ செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தாராம்.

வாக்காளர்கள்
இந்த நிலையில் வாக்காளர்கள் சிலர் நேற்றைய தினம் அடகுக் கடையில் அந்த காயினை கொடுத்து காசு பெற முயன்றனர். அப்போது உரசி பார்த்ததில் அது தங்க காசு இல்லை என்றும் தங்கம் முலாம் பூசப்பட்ட வெறும் தகடு என்றும் அடகு கடைக்காரர் கூறிவிட்டார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து துரைபாண்டியனை கேட்க சென்றால் வீடு பூட்டப்பட்டிருந்ததாம். போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். அவரது மனைவியின் போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மணிமேகலையின் கணவர்
மணிமேகலையின் கணவர் ஓட்டுக்காக பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்றும் ஒரு வேளை மணி திமுக பிரமுகர் ஓட்டுக்காக பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம்சாட்டிய அவர்கள் மணிமேகலை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிக்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் அவரது வெற்றி செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டுமென தேர்தல் அலுவலர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications