குத்தாட்டம், கைகுலுக்கல்... தொடங்கிடுச்சுடோவ் ஆர்கே நகரில் பிரச்சாரம்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்த கையோடு திமுக, அதிமுக வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதியைக் கைபற்றப் போவது யார் என்பதை பொருத்தை தமிழக அரசியலின் எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மக்களின் அங்கீகாரம் இரட்டை இலை சின்னத்தை வென்ற அதிமுகவிற்கா, சின்னத்தை பறிகொடுத்தாலும் மக்களின் செல்வாக்கு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தினகரனுக்கா என்ற போட்டிக்கு தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்கப்போகின்றன.
எதிர்கட்சிகளிடையே தான் பொதுவாக தேர்தலில் போட்டி இருக்கும், ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் என்ன புதுமை என்றால் எதிரிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. மற்றொரு புறம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் ஆர்கே நகரை தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி பலத்த கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று திட்டம் போடுகிறது திமுக.

திமுக வாக்கு சேகரிப்பு
திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தொகுதியில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். திமுகவின் மருதுகணேஷ்க்கு ஆதரவாக ஜெ. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.

குத்தாட்டம் போட்ட பெண்கள்
தொகுதி மக்களுக்கு பரிட்சயமான மருதுகணேஷிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரச்சாரம் என்றால் குத்தாட்டம் இல்லாமலா, திமுகவின் வாக்கு சேகரிப்பில் இந்த வயசிலும் என்னமா குத்தாட்டம் போடுகிறார் இந்தப் பெண். எல்லாம் என்னத்துக்கு போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து என்பதற்குத் தான்.

கைகூப்பி ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்
தேர்தல் சூடுபிடித்துவிட்டதை உணர்த்தும் விதமாக ஆர்கே நகர் தொகுதியில் வீதிவீதியாக கட்சிக் கொடிகள் பட்டொலி வீசி பறக்கத் தொடங்கியுள்ளன. தொகுதியில் காண்போரை எல்லாம் பார்த்து கைகூப்பி ஓட்டு கேட்கத் தொடங்கிவிட்டனர் வேட்பாளர்கள்.

அதிமுக பிரச்சாரம்
இதே போன்று அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனும் தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர், துணை முதல்வரின் பிரச்சாரம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

ஆர்கே நகரில் பிரச்சார அனல்
டிடிவி தினகரன் டிசம்பர் 5ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் படையெடுப்பால் ஆர்கே நகரில் தேர்தல் களம் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications