திமுக, அதிமுக, பாமக, மதிமுக, பாஜக, நாதக, பிஎஸ்பி..எல்லா கட்சிக்கும் ஒரு சேர சூனியம் வச்சுட்டாங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் 'பஞ்சாயத்து பேசும்' காலம் போல.. ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என உட்கட்சி மோதல்களை சந்திக்காத கட்சியே இல்லை என்கிற நிலைமை உருவாகிவிட்டது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகளுக்குள்ளான மோதல்கள் அடுத்தடுத்து அரங்கேறி தலைப்புச் செய்திகளாகி வருகின்றன.

திமுக: திமுக வரலாற்றிலேயே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவர் தாம் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சம்பவம் அண்மையில் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் குறித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சு சர்ச்சையானதால், அவரே வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதேபோல அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சால், வழக்கத்துக்கு மாறாக திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினே, அவரை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு திருச்சி சிவாவை துணைப் பொதுச்செயலாளராக்கினார்.
அதிமுக: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னையில் சந்தித்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவின் சீனியர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்த திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் பகிரங்கமாகவே கொந்தளித்து போயுள்ளனர். சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிமுகவில் பெரும் பூகம்பமே வெடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாஜக: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பதில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையை மாற்றியதை ஏற்க மருத்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
மதிமுக: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா எதிராக நிற்கிறார்; மதிமுக, ஒரு ஜாதிய கட்சியாக மாறிவிட்டத் என துரை வைகோ எதிர்ப்பாளர்கள் முகத்துக்கு நேரே குற்றம்சாட்டுகின்றனர். மல்லை சத்யா தான் அத்தனைக்கும் காரணம் என கூறி பல்வேறு மாவட்டங்களில் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதனை வைகோ, பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு கண்டித்துள்ளார். மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், மல்லை சத்யாவா? துரை வைகோவா? என்கிற சங்கத்திக்கு விடை தெரிந்துவிடும்.
நாம் தமிழர் கட்சி: சீமானுக்கு எதிராக நாம் தம்ழர் கட்சியில் சீனியர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். தற்போது, சீமானின் மனசாட்சியாக பேசப்படும், சாட்டை துரைமுருகனுக்கு எதிராகவே சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சாட்டை துரைமுருகனின் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சீமான். இத்தனைக்கும நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். அடுத்த விக்கெட் சாட்டையா? என்கிற விவாதம் நடந்து வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆனந்தர்ன், ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் விடுவிக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. என்னை நீக்க மாநில தலைவர் ஆனந்தனுக்கு யார் அதிகாரம் தந்தது என கேள்வி எழுப்புகிறார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
இப்படி அத்தனை தமிழக அரசியல் கட்சிகளும் ஒரு சேர ஒரே நேரத்தில் உட்கட்சி பிரச்சனைகளை எதிர்கொள்வதாலேயே, ஒருவேளை சூனியம் வச்சுட்டானுகளோ என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுந்துவிடுகிறதே!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications