வீடு தேடிப் போய் ஸ்டாலின் கூப்பிட்டதற்கு இது தேவைதான்... 'கீழ்த்தரமாக' கிண்டலடிக்கும் சுவாமி!
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தம்பி மகன் திருமணத்துக்கு வீடு தேடி போய் அழைப்பிதழ் கொடுத்ததற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மிகவும் கீழ்த்தரமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க. தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி. இவரது திருமணம் ஜூன் 8-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழை அருள்நிதியின் பெரியப்பாவும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். பாரதிய ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டுக்கும் போய் நேரில் அழைப்பு கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் இந்த சந்திப்பு பற்றி பெருமையாகத்தான் தமது ட்விட்டரில் பதிவு போட்டிருந்தார் சுவாமி. இந்த நிலையில் திருநெல்வேலியில் திருமண விழாவில் மணமகளுக்கே தாலி கட்டப் போய் பயங்கர சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் சுப்பிரமணியன் சுவாமி.
When at MK family wedding on June 8 th shall I carry some Mangal sutras or Thaalis and give it to Veeramani?
— Subramanian Swamy (@Swamy39) May 21, 2015 இது தொடர்பான வீடியோ வெளியாக அவர் முகம் கேவலமாக அம்பலப்பட்டு போனது. இதுபற்றியெல்லாம் வாய் திறக்காத சுப்பிரமணியன் சுவாமி கீழ்த்தரமாக ஒரு பதிவை ட்விட்டரில் போட்டிருக்கிறார்...
அதில், கருணாநிதி வீட்டு திருமணம் 8ம் தேதி நடைபெற இருக்கும் போது நான் தாலியை கொண்டு செல்ல வேண்டுமா? அதை அதை வீரமணியிடம் கொடுக்க வேண்டுமா? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். அண்மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வையும் இந்த திருமண நிகழ்வையும் இணைத்து வைத்து கேடுகெட்டத்தனமாக ஒரு பதிவை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
இது தி.மு,க. தலைமை மற்றும் தொண்டர்களை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.. "எதையோ கூப்பிட்டு எங்கேயோ உட்கார வைத்தால்.. " என்கிற பாணியில் தி.மு.க. தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சுவாமியை வறுத்தெடுக்கின்றனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications