சென்னை வந்த அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி.. கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்
மு.க அழகிரியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கபட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: மு.க அழகிரியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கபட்டுள்ளார்.
நாளை மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்த இருக்கிறார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி அவர்கள் செல்ல இருக்கிறார்கள்.

இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் இப்போதே, சென்னைக்கு சென்று ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இதையடுத்து இன்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி வரவேற்றார்.
இந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கபட்டுள்ளார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்றதால் ரவி கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக, பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ரவியை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்ள கூடாது என்றும் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications