தொண்டர்கள் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி வைக்கும் கருணாநிதி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டிலேயே எளிமையாக தொண்டர்களின் திருமணங்களை நடத்தி வைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
கருணாநிதி முதுமையில் இருப்பதால் கட்சி இனி நம்பக்கம்தான் என்று ஆளுக்கொரு திசையில் திமுகவை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லகானை கருணாநிதியே கையில் எடுத்துக் கொண்டார்.
அத்துடன் முடிந்த அளவு தன்னால் இன்னமும் செயல்பட முடியும் என்று வெளிப்படுத்தி கோஷ்டி தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் செய்கிறார்.

வலிமையோடு இருக்கேன்...
அண்மையில் திருச்சி சிவாவின் மனைவி படத் திறப்பு விழாவில் பேசிய கருணாநிதி, நான் வலிமை பெற்று வருகிறேன் என்று கூறினார். அந்த கையோடு திருவாரூர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

தினமும் திருமணம்
அத்துடன் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தினமும் தொண்டர்களின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் தன் தலைவர்தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

முன்பு இப்படி
ஆனால் அதற்கு செலவு செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. அத்துடன் மாவட்ட செயலாளர்கள் அனுமதியெல்லாம் அவசியமும் கூட.

குவியும் கடிதங்கள்
தற்போது மாவட்ட செயலாளர் அனுமதி எதுவும் தேவை இல்லை என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதனால் கடிதம் மூலம் வரும் வேண்டுகோளுக்கு பதிலளித்து இன்ன தேதியில் இத்தனை மணிக்கு தலைவர் வீட்டில் தயாராக இருங்கள் கடிதம் போகிறதாம்.
அதன்படியே கோபாலபுரத்தில் கருணாநிதி தலைமையில் தினமும் திருமண திருவிழாதான்!
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications