For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குறைகளை படிப்படியாக நிவர்த்தி செய்யும்: ஸ்டாலின்

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களின் குறைகளை படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோம்பை, வண்ணாடு, தென்புறநாடு உள்ளிட்ட கிராம மக்களை, மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் இன்று சந்தித்தார். அப்போது செம்புளிச்சாம்பட்டி என்ற இடத்தில் ஸ்டாலின் பேசுகையில், பல்வேறு சிறப்புகள் பெற்ற பச்சமலைக்கு வருகை தரும் முதல் அரசியல் தலைவர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

DMK came to power gradually step by step fulfilled the demands of the people

பச்சமலையில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் மையம், பச்சை மலை- கெங்கவல்லி இடையே பேருந்து போக்குவரத்து, மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, மூலிகை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நான்கரை ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை.

110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Dmk Treasurer m.k.stalin said, DMK came to power gradually step by step fulfilled the demands of the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X