அறிவாலயத்தில்.. விறுவிறுப்பான வேட்பாளர் நேர்காணல்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான நேர்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
40 தொகுதிகளுக்கும் திமுக விருப்ப மனுக்களை கட்சியினரிடமிருந்து பெற்றுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பியுள்ளோரிடம் நேர்காணல் ந
நடைபெறுகிறது. இன்று தொடங்கி மார்ச் 3ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோரது முன்னிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேர்காணலில் ஈடுபட்டுள்ளது.
நேர்காணலின்போது, தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளற்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்ன பிற செயலாளர்கள் உள்ளிட்டோர் வேட்பாளருடன் உடன் இருப்பார்கள்.

காலையில் 2.. மாலையில் 2
இன்று காலை நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மாலையில், தென்காசி தனித் தொகுதி மற்றும் தூத்துக்குடி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

இதேபோல மார்ச் 3ம் தேதி வரை
இதேபோல ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகள் வீதம் நேர்காணல் நடைபெறும்.

40 தொகுதிகளுக்கும் முடிந்த பிறகு
40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் கண்ட பிறகு கூட்டணியை இறுதி செய்யவுள்ளது திமுக. அதன் பின்னர் தனது வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு இவர்கள்தான்
தற்போது திமுக கூட்டணியில் முக்கிய கூட்டணிக் கட்சிகளாக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளின. இதுபோக சிறு சிறு கட்சிகள் நிறைய உள்ளன.

வேற யாராச்சும்
இவர்கள் போக வேறு சில கட்சிகளையும் திமுக எதிர்பார்க்கிறது. குறிப்பாக தேமுதிகவுக்காக இன்னும் கூட திமுக காத்திருக்கவே செய்கிறது. நேர்காணல் முடிவதற்குள்ளாக தேமுதிக ஏதாவது வாய் திறக்குமா என்ற எதிர்பார்ப்பும் திமுக வட்டாரத்தில் நிலவுகிறது.
-
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு












Click it and Unblock the Notifications