For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குப்பதிவு எந்திரம் பழுது: ஈரோட்டில் ஓட்டு போட முடியாமல் தவித்த திமுக வேட்பாளர்

By Siva
|

ஈரோடு: ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பவித்ர வள்ளி வாக்கு போட முடியாமல் தவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு துவங்க தாமதமானது.

DMK candidate Pavithravalli struggles to cast vote

ஈரோட்டில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு தாமதமானது. காலையிலேயே வாக்களிக்க வந்த ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பவித்ரவள்ளி வாக்குப் பதிவு செய்ய முடியாமல் தவித்தார்.

எந்திர பழுது சரி செய்யப்பட்ட பிறகு அவர் வாக்களித்தார். இதே போன்று சுசீந்திரம், காங்கேயம், சேலம் வடக்கு ஆகிய பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.

English summary
Erode lok sabha constituency DMK candidate Pavithravalli struggled to cast her vote because of EVM malfunction at a polling booth in Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X