போராட்டம் எதிரொலி- அரக்கோணம், ஒரத்தநாடு திமுக வேட்பாளர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அரக்கோணம் மற்றும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதலே பல தொகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு, பாளையங்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரக்கோணம்(தனி) தொகுதி வேட்பாளர் பவானிக்கு எதிராக இன்றும் போராட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் தாம் அத்தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானிக்கு பதிலாக என். ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
அதேபோல் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். ராஜ்குமாருக்கு பதிலாக எம்.ராமச்சந்திரன் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு 6 முறை வேட்பாளர்களை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications