ஓராண்டுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி.. உற்சாக வெள்ளத்தில் திமுகவினர்
சென்னை: ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு ஓராண்டாக கருணாநிதி எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதி வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் பங்கேற்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர். நோய் தொற்று காரணமாக அவர் வெளியே வரவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதி ஓராண்டுக்கு பிறகு முதல் முறையாக முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், நடைபெறும் பவள விழா கண்காட்சியை கருணாநிதி பார்வையிட்டார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கருணாநிதியின் வருகை திமுக தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளது.
திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், விரைவிலேயே பொதுக்கூட்டங்களில், கருணாநிதி உரையாற்றுவதை தொண்டர்கள் கேட்க உள்ளனர் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications