தமிழகத்தில் நெருக்கடி நிலை நிலவுகிறது.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

இவரது கைதுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
— M.K.Stalin (@mkstalin) October 9, 2018
உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க!
அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நக்கீரன் கோபால் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெறவேண்டும். நக்கீரன் கோபால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு அராஜகமாக செயல்படுகிறது, என்றுள்ளார்.
[நக்கீரன் கோபாலை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு.. போராட்டத்தில் குதித்த வைகோ கைது]
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications