சேலம் கலெக்டர் அதிமுக அலுவலக ஊழியர் போல செயல்படுகிறார்.. திமுக புகார்

ஆட்சித் தலைவர் மகரபூசணத்தை மாற்ற வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது. திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அதில் ஏற்காடு இடைத் தேர்தலி்ல அதிமுக அரசு தொடர்ந்து விதிமீறல்கள், நன்னடத்தை விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி மனு அளித்தனர்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையி்ல், சேலம் கலெக்டர் மகரபூசணம் அதிமுக அலுவல கடை நிலை ஊழியர் போல செயல்படுகிறார். அவரது தலையீட்டின்பேரில் ஏற்காடு தி.மு.க வேட்பாளர் மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சாதகமாக கலெக்டர் நடந்து கொள்கிறார்.
மேலும், அக்டோபர் 23ம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மால் பேருந்துகளில், அதிமுக மிகவும் திட்டமிட்டு, அறிவியல்பூர்வமாக இரட்டை இலைச் சின்னத்தை வரைந்துள்ளது. தற்போது 50 பேருந்துகளில் இந்த சின்னத்தை வரைந்துள்ளனர். மேலும் 610 பேருந்துகளிலும் இதே சின்னத்தை வரைந்துள்ளனர்.
இந்த செயலானது அதிகாரதுஷ்பிரயோகமாகும். அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இதைச் செய்திருப்பது சட்டவிரோதமாகும். மேலும் இது குற்றச் செயலுமாகும்.
தொடர்ந்து அதிமுக ஏற்காடு தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் சேலம் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்க முடியும் என்று கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications