தமிழகத்தில் அதிமுக அரசையே திமுகவால் அசைக்க முடியவில்லை.. பாஜகவை என்ன செய்யமுடியும்? தமிழிசை நக்கல்
அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க கூட முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க கூட முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. குட்கா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை கையிலெடுத்துள்ள திமுக அதனை காரணமாக வைத்து அரசை விமர்சித்து வருகிறது.
மேலும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் திமுக நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவை சாடி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு முயற்சி
தமிழிசை மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெட்ரோல் -டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ., அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றார்.

எதிர்மறையான அரசியல்
மேலும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது.

திமுகவால் அசைக்க முடியவில்லை
தமிழகத்தில் அதிமுக ஆட்சியைகூட திமுகவால் அசைக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத திமுக, நாட்டையே ஆளும் பாஜகவை விமர்சிப்பபது நகைப்புக்குரியது.

நேர்மையாக தேர்தல்
மேலும் தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்றும தமிழிசை தெரிவித்தார்.

பாஜக விருப்பம்
இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விரும்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்ததில் திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

திமுக நாடகம்
இலங்கை இறுதிப்போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகமாடி உள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications