உள்ளாட்சி தேர்தல், காவிரி விவகாரம்: திமுக மாவட்ட செயலாளர்களை சந்தித்த கருணாநிதி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, திமுகவின் வெற்றி வாய்ப்பு, உள்ளாட்சி பகுதிகளில் பிற கட்சிகளின் பலம் குறித்து கருணாநிதி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

மேலும் காவிரி விவகாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் திமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications