"லிஸ்ப்டிக்".. துரைமுருகனின் பண்ணை வீடு.. எதையும் தூக்ககூட முடியாது.. கடுப்பான கொள்ளையர் செய்த பகீர்
துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது
திருப்பத்தூர்: துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்த, புதுபுது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்போதும் ஒரு தகவலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், துரைமுருகனுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது.. இது 25 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வீடு ஆகும்.. இந்த பெரிய சொகுசு பங்களா வீட்டில்தான், துரைமுருகன் அடிக்கடி வந்து ரெஸ்ட் எடுப்பது வழக்கம்.
இந்த பண்ணை வீட்டை பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா 2 பேரும் பராமரித்து வருகிறார்கள்.. இதற்காக அங்கேயே தங்கியும் உள்ளனர்.

சொகுசு பங்களா
இந்நிலையில், பணப்பட்டுவாடா உட்பட பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்ததால், இந்த பங்களாவில் ஒருகும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. நேற்று முன்தினம், பண்ணை வீட்டின் திறந்தவெளியில் உள்ள இடத்தில் படுத்து பிரேம்குமார் தூங்கி கொண்டிருந்தார்.. அப்போதுதான், மர்மநபர்கள் அந்த பங்களாவின் பெரிய கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று உள்ளனர். ஆனால், எவ்வளவு தேடியும் வீட்டுக்குள் பணமும் இல்லை.. நகையும் இல்லை.. வெறும் கட்டில், பீரோ, சேர், சோபா, ஃபிரிட்ஜ் போன்றவை இருந்துள்ளன..

ஏமாற்றம்
இவைகளையாவது எடுத்து செல்லலாம் என்றால், ஒவ்வொன்றும் பெரிய பெரிய பொருட்கள்.. ஓவர் வெயிட்.. தூக்கவும் முடியவில்லை.. அதனால் எரிச்சல் அடைந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.. ஆனால், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இருந்த ஹார்டு டிஸ்க்கை மட்டும் கையோடு எடுத்து சென்றுவிட்டனர். மறுநாள் காலை பிரேம்குமாரும், சங்கீதாவும், வீட்டிற்குள் நுழைந்தபோதுதான், கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ்
உடனடியாக துரைமுருகனுக்கும் தகவலை சொல்லி, போலீசுக்கும் விஷயம் பறந்தது.. இதையடுத்து விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, விசாரணையை துவக்கினர்.. ஆனால், அந்த நபர்கள் யார் என்று தெரியவில்லை.. ஹார்ட் டிஸ்க்கை எடுத்து போய்விட்டதால், எந்த அடையாளமும், க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை.

லிப்ஸ்டிக்
இந்நிலையில், அந்த கொள்ளையர்கள் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளருத.. துரைமுருகன் பங்களா என்றதுமே, வீட்டிற்குள் ஏகப்பட்ட பணம் நகை இருக்கும் என வாயை ஆவென பிளந்து கொண்டு வந்த நிலையில், கடுப்பாகி உள்ளனர்.. பிறகு, அங்கு ஒரு லிப்ஸ்டிக் கிடந்துள்ளது.. அதை எடுத்து, சுவற்றில், "ஒரு நூறு ரூபாய் கூட வெக்க மாட்டியா?" என்று எழுதியுள்ளனர்..

யார் அவர்கள்?
அதுமட்டுமல்ல, அங்கிருந்த ஒரு நோட்டு புத்தகத்திலும், "ஒரு ரூபாய் கூட இல்ல.. எதுவும் எடுக்கல"என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டு போயுள்ளனர்.. திருட வந்ததும் இல்லாமல், இவ்வளவு துணிச்சலாக எழுதி வைத்தது யார் என்று தெரியவில்லை.. ஆனால் செம டென்ஷனுடன் திரும்பி சென்றிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications