ஸ்டாலின், துரைமுருகன் ஒருமனதாக தேர்வாவார்கள்.. ஆ.ராசா உறுதி!
திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது. மிகவும் பரபரப்பான சமயத்தில் கூடும் இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.
இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார். அதில் பொதுக்குழுவில் தேர்தல் நடக்கவே வாய்ப்பில்லை. தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
திமுகவின் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். திமுக பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் போட்டியிடவில்லை. துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications