திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டமாக தென்காசி உள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஏராளமான கனிமவளங்கள் கடத்தி செல்லப்படுகிறது.

மண், மணல், ஜல்லிகள் என்று ஏராளமான கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தடுக்க தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் கூட தொடர்ந்து தினமும் கனிமவளங்கள் லாரி லாரியாக கேரளாவுக்கு அள்ளி செல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் கனிமவள கொள்ளையால் நொந்துபோன திமுக நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனை செய்தவரின் பெயர் சந்திரசேகர். இவர் தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியை சேர்ந்தவர். திமுகவில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சந்திரசேகர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில், ‛‛கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சழல் துணை அமைப்பாளராக பணியாற்றினேன். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் இருந்து ஏராளமான கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கனரக வாகனங்களால்பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தீமைகளை பற்றி பலமுறை தங்களுக்கு எடுத்துரைத்தும் பலன் இல்லை. மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பளராக இருந்து கொண்டு எங்கள் பகுதி சுற்றுச்சூழலை காப்பாற்ற, பாதுகாக்க முடியவில்லை.
எனவே எனது பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடம் சுயமரியாதையை கற்ற மாணவர். ஆகவே எனது சுயமரிாதையகைாப்பாற்ற அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications