3 நாள் கூட்டத்தொடரில் 2 நாட்கள் திமுக எம்.எல்ஏக்கள் வெளியேற்றம் – காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, அமளி நிலவிய நிலையில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் 2வது நாளாக திமுக எம்.எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இரண்டு நாட்களுக்கு முன்னர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலையைப் பற்றி கேள்வி எழுப்பினேன்.
அதற்கு 50 நிமிடம் புள்ளி விபரங்களுடன் முதல்வர் விளக்கம் அளித்தார். நடந்தது, நடக்க இருப்பது அடிக்கல் நாட்டப்பட்டது என்று பட்டியலிட்டார். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. அவற்றை பற்றி இன்று நான் பேச நான் முயற்சி செய்தேன். எனக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நாங்கள் சபாநாயகரிடம் பேச வாய்ப்பு கோரி வலியுறுத்தினோம். ஆனால் எங்களை வெளியேற்றிவிட்டனர்.
சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று பேசிய திமுக சட்டப்பேரவை குழு தலைவர் மு.க. ஸ்டாலின், அவை விதி 110 ன் கீழ் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக முதியோர் உதவித்தொகை பற்றிப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.ஏக்களும், புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications