ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகளிடம் உள்ள ஆதரவை பறை சாற்றிய திமுக அவசர செயற்குழு!
Recommended Video

சென்னை: மு.க.அழகிரி பேட்டியால் எழுந்துள்ள சலசலப்புக்கு நடுவே, திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் உள்ள பலம் தெளிவாக வெளி உலகிற்கு காட்டப்பட்டது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை, அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டிருந்தன.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுவதே கூட்டத்தின் நோக்கம்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசினார்கள். முதலிலேயே, கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின், அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பொதுக்குழுவை என்று கூட்டுவது என்பது குறித்தும் இன்று முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் அளவில் கூட்டத்தை முடித்துக்கொள்ள தீர்மானித்து, அதன்படி நிறைவடைந்தது.
அனைத்து மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலினுக்கு இருக்கும் ஆதரவை பறைசாற்றிவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications