அலறவிடும் ஆர்கே நகர்... ஒட்டுமொத்த திமுகவையே களமிறக்கும் ஸ்டாலின்!
ஆர்.கே. நகர் தொகுதியில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் ஒட்டுமொத்த திமுகவையும் அங்கு களமிறக்க திட்டமிட்டுள்ளாராம் ஸ்டாலின்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளை களமிறக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரதான அரசியல் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் சசி அணி, ஓபிஎஸ் அணி, தீபா கோஷ்டி மூன்றுமே மல்லுக்கட்டி வெல்லத்தான் முயற்சிக்கும். இப்படி அதிமுக வாக்குகள் பிரிந்து கிடக்கும் நிலையில் திமுக எளிதாக வென்றாக வேண்டிய நிலை இருக்கிறது.
1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக இத்தொகுதியில் வென்றதும் இப்படித்தான். இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் பொதுவேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனால் திமுக முழுவீச்சில் தேர்தல் பணியாற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் திமுகவின் மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் என அனைவரையும் அதாவது ஒட்டுமொத்த திமுகவையே களமிறக்கும் முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications