இளம் வேட்பாளராக களம் இறங்கும் திமுகவின் பவித்ரவள்ளி
ஈரோடு: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் எச்.பவித்ரவள்ளி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வரதப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர். 13-4-1987 அன்று பிறந்த இவர், சென்னை அண்ணாநகர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 10-ம் வகுப்புவரை படித்தார்.
எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் ப்ளஸ்டூ முடித்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு பட்ட மேற்படிப்பு படித்துள்ளார்.
எச்.பவித்ரவள்ளியின் கணவர் வ.ஹரிபிரசாத், வரதப்பம்பாளையம் கிளை தி.மு.க. செயலாளராக உள்ளார். 2011ம் ஆண்டுதான் பவித்ரவள்ளி திமுகவில் இணைந்தார்.

மாமியார் வழியில்
கணவர் ஹரிபிரசாத்தின் தாயார் கிருஷ்ணவேணி கடந்த 1996-ம் ஆண்டுமுதல் 2001-ம் ஆண்டுவரை காங்கயம் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தவர். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி தலைவராக இருந்தவர். மாமியார் வழியில் மருமகள் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
மிக இளவயது வேட்பாளர்
பவித்திரவள்ளி ஈரோடு தொகுதியின் மிக குறைந்த வயதுள்ள வேட்பாளர். 27 வயதான இவர் திமுக முன்னாள் எம். எல்.ஏ வெள்ளக்கோவில் சாமிநாதனின் பரிந்துரையின் பேரில் ஸ்டாலினின் ஆதரவில் வேட்பாளராகியிருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு
இவர் ஈரோடு மற்றும் திருப்புர் மாவட்ட மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லை. திமுக செல்வாக்கு மற்றும் நிர்வாகிகளின் சரியான ஒத்துழைப்பு இருந்தால் 2 வது அல்லது 3 வது இடத்திற்கு தாராளமாக வருவார் என்று திமுகவினரே கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications