உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: எங்களைக் கேட்காம தீர்ப்பு சொல்லக்கூடாது- திமுக கேவியட் மனு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 3 அரசாணைகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பட்டிருந்தார்.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த கேவியட் மனுவை திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டபிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் மனு தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக முன்னறிவிப்போ, தகவலோ இன்றி பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பதைத் தடுக்கும்வகையில் வாதி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவின் பெயர்தான் கேவியட் மனு.
அவசரகதியில் முறையாக இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல்செய்த மனுமீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications