ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.
Recommended Video

சென்னை:ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதில் அதிமுக மற்றும் தினகரன் அணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக இன்று வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கட்சின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் மருதுகணேஷை மீண்டும் களமிறக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அறிவித்தார்.
கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கே திமுக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications