செங்கல்லோடு அலையும் உதயநிதி இதுக்கு பதில் சொல்லுங்க.. வீடியோ போட்டு எடப்பாடி எழுப்பிய கேள்வி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், காலனி பூங்கா அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இதை திறந்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும், எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று திறக்காமல் வைத்துள்ளனர் என்று கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசினார்.

எங்கு சென்றாலும் ஒற்றை செங்கல்லோடு அலையும் உதயநிதி ஸ்டாலின், பல லட்சம் செங்கல்லால் கட்டப்பட்ட இந்த காலனி பூங்காவை ஏன் திமுக அரசு திறக்கவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

DMK has done nothing for Tamil Nadu for three years Slams Admk Edappadi palaniswamy

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்தார். கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து எடப்பாடி பேசியதாவது;-

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்: இந்த கூட்டத்தை பார்க்கின்ற போது அதிமுக பிரசார கூட்டம் போல இல்ல.. அதிமுக மாநில கூட்டம் போல் பிரமாண்டமாக இருக்கிறது. எனவே இந்த தேர்தல் பிரசார கூட்டமே கள்ளக்குறிச்சி வேட்பாளர் குமரகுரு வெற்றி பெற்றுவிட்டார் என்று சான்றளிக்கும் கூட்டம் இது. கள்ளக்குறிச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் குலுங்கிக்கொண்டு இருக்கிறது.

எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தலை. கடல் போல் காட்சி அளிக்கிறது மக்கள் கூட்டம். எனவே ஸ்டாலின் அவர்களே.. அதிமுக இரண்டாக போயிட்டு, மூன்றாக போயிட்டு.. நாளாக போட்யிட்டு என்று சொல்வதை விட்டுவிட்டு இங்கே கள்ளக்குறிச்சியில் வந்து பாருங்க.. எப்படி இருக்கிறது என்று.. எங்க கூட்டணியை பாத்து ஸ்டாலின் சொல்றார் வீக் கூட்டணி என்று..

யாருங்க வீக் கூட்டணி: யாருங்க வீக்.. நீங்க தான் வீக் கூட்டணி.. நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிக்குறீங்க.. நாங்க மக்களை நம்பி தேர்தலில் நிக்குறோம்.. அதிமுகவை எல்லாரும் குறைச்சி எடபோட்டுட்டு இருக்கிறார்கள். இந்த தேர்தலி ரிசல்ட் வரட்டும் யாரு பலம் வாய்ந்தவர்கள் என்று தெரியும்.

இதேபோன்று நீட் தேர்வு விவகாரத்திலும் அதிமுக மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். அதிமுக தான் நீட் தேர்வை கொண்டு வந்ததாக பச்சை பொய் சொல்கிறார். ஒரு பொய்யை பலமுறை சொன்னால் உண்மை என்று ஆகிவிடும் என்று அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் செய்ததை சொல்லி வாக்கு கேட்க முடியாததால், எங்கள் மீது பொய் பழி போட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.

4 முதலமைச்சர்கள்: சரி தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னார்? நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொல்லி தானே ஆட்சிக்கு வந்தார். இப்போது நீட் தேர்வை ரத்து செய்துவிட்டாரா?... இப்படி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு 3 வருஷத்தை ஓட்டிவிட்டார். 3 வருஷ ஆட்சியில் மக்களுக்கு ஒன்னும் செய்யலை. 3 வருஷமும் குடும்ப ஆட்சி தான் நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்யவில்லை. 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.. ஒன்று மு.க ஸ்டாலின், இன்னொருவர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், அப்புறம் துர்கா ஸ்டாலின். என 4 பேர் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் இதற்கு முட்டுக்கட்டை போடனும்.

செங்கல்லோடு அலையும் உதயநிதி: இதேபோல் ஒருவர் ஊர் ஊராக செங்கலை தூக்கிக்கொண்டு போகிறார். அவர் என்ன இங்கேயும் வந்தாரா? என எடப்பாடி கேட்க தொண்டர்களும் ஆம்.. வந்தார். என்று சிரித்தபடியே தெரிவித்தனர். தொடர்ந்து கூறிய எடப்பாடி, செல்கிற இடமெல்லாம் செங்கலை தூக்கிக்கொண்டு சென்ற உதயநிதி ஸ்டாலின், காட்ட வேண்டிய இடத்தில் செங்கலை காட்டியிருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கும்.

திமுக எம்பிக்கள் எத்தனை பேர் இருந்தார்கள். எய்ம்ஸ் கட்டவில்லை. கட்டவில்லை என்று சொல்கிற திமுக எம்பிக்கள் எல்லாரும் நாடாளுமன்றத்தில் தூங்கிக்கொண்டு இருந்தார்களா?.. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியலை.. ஆனால் அவர் இந்தியாவை காக்க அழைக்கிறாராம்.. இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

பிரமாண்ட காலனி பூங்கா: அதிமுக ஆட்சியில் இங்கே 25 கி.மீட்டரில் பிரமாண்ட காலனி பூங்கா கட்டிக்கொடுக்கப்பட்டது. ரூபாய் 1,000 கோடியில் 1,000 ஏக்கரில் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா. இந்த பூங்காவையே 3 வருடமாக திறக்காமல் வைத்திருக்கிறது இந்த திமுக அரசு. ஒற்றை செங்கலை தூக்கிக்கொண்டு செல்லும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே பல ஆயிரம் செங்கலால் கட்டப்பட்டது இந்த காலனி பூங்கா.

இதை ஏன் திறக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்று கூறி எல்இடி திரையில் காலனி பூங்கா விவரத்தை காட்டினார். பிரசார பொதுக்கூட்டத்தில் இது ஒளிபரப்பப்பட்டது. ஏன் திறக்க மறுக்கிறீர்கள். இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதை திறந்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும், எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று திறக்காமல் வைத்து இருக்கிறார்கள்.

போராட்டம் நடத்தப்படும்: இனியாவது இதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் நடந்து முடிந்த பின், திறக்க கோரி போராட்டம் நடத்துவோம். நான் முதல்வராக இருந்த போது அமெரிக்கா சென்றிருந்தேன். அங்குள்ள கால்நடைக்கான பண்ணையை பார்த்தோம். அங்கு ஒரு பசு 65 லிட்டர் பால் கறக்கிறது.

ஒருநாளைக்கு அந்த பால் பண்ணையில் இருந்து 1.62 லட்சம் பால் உற்பத்தி பண்ணுறாங்க. அந்த கலப்பின பசுக்களை நம் மாநிலத்திலும் கொண்டு வருவதற்காக தான் இதை கொண்டு வந்தோம். ஆனா இத திறக்காமல் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+