கருணாநிதி, ஸ்டாலின் கையில் திமுக இல்லை... கார்ப்பரேட் கம்பெனி வசமிருக்கு: வைகோ
நெல்லை: பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக என்ற இயக்கம் கருணாநிதியிடமோ, ஸ்டாலினிடமோ இல்லை. அக்கட்சி இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்கியுள்ளது என்று திமுகவில் 20 ஆண்டுகாலம் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனி அணியாக களமிறங்குகிறது. இதுவரை 4 கட்ட பிரச்சாரங்களை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முடித்துள்ளனர்.

இனி வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை என பல கட்ட நகர்வுகள் உள்ள நிலையில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ, தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்காக களப்பணியாற்ற ஆலோசனைகளை கூறி வருகிறார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் சங்கர்கொலையை தமிழக போலீஸ் தடுத்து நிறுத்த தவறிவிட்டது. இதனை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கடந்த இரண்டரை மாத காலமாக தேமுதிமுகவிற்காக திமுக காத்துக்கொண்டிருந்தது. ஆனால் திமுக வுடனான கூட்டணிக்கு ஏற்கனவே விஜயகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா,திமுகவை வை தில்லுமுல்லு கட்சி என்றாரே, அதற்கு கருணாநிதி எந்த பதிலும் சொல்லவில்லையே.
எந்த கேள்விக்கும் உடனடியாக பதில் சொல்லுவாரே கருணாநிதி. ஆனால் பிரேமலதா சொன்னதற்கு பதில் எங்கே போனது. மவுனமாக இருந்தால் அது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியா என்று கேட்டார் வைகோ.
அண்ணாதுரையால் உருவாக்கப்பட்ட திமுக என்ற இயக்கம் கருணாநிதியிடம் இல்லை. ஏன் ஸ்டாலினிடம் கூட இப்போது திமுக இல்லை. அக்கட்சி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்கியுள்ளது. திமுகவை இருபது ஆண்டுகள் வளர்த்தவன் என்ற முறையில் இதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார் வைகோ.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications