சட்டசபையிலிருந்து வெளியேற்றம் எதிரொலி... ஆக. 22ல் திமுக பொதுக்கூட்டம்- ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றம் படும்பாடு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின்போது, குண்டுக்கட்டாக, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை சபாநாயகர் தனபால் உத்தரவின்பேரில், அவைக் காவலர்கள் வெளியேற்றினர். இதில், துரைமுருகன் மயக்கம் அடைந்தார். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர், சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்து, போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் இருந்து ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றம் படும்பாடு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications