மெகா கூட்டணியுடன் களமிறங்கியும் ஆர்கே நகரில் தட்டுதடுமாறும் திமுக!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களமிறங்கியும் திமுக தடுமாறி வருகிறது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களமிறங்கியும் திமுக தடுமாறி வருகிறது.
ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த ஓராண்டுக்குப் பிறகு பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

19 சுற்றுகளாக எண்ணிக்கை
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ராணிமேரி கல்லூரியில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மூன்றாவது இடத்தில் திமுக
இதன் முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் 1891 வாக்குகள் பெற்றுள்ளார். 647 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் அதிமுகவின் மதுசூதனனும் 361 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் திமுகவின் மருதுகணேஷும் உள்ளனர்.

4 மடங்கு குறைவு
தினகரன் பெற்றுள்ள வாக்குகள் மதுசூதனனைவிட 3 மடங்கு அதிகமாகும். திமுகவின் மருதுகணேஷை விட 4 மடங்கு அதிகமாகும்.

திமுகவுக்கு ஆதரவு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் தாங்கள் தான் தவிர்க்க முடியாத சக்தி என காட்டிக்கொள்ள விரும்பிய திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்டது.

தட்டுதடுமாறும் திமுக
ஆனால் இரண்டாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில் திமுக மிக குறைந்த வாக்குகளுடனே மூன்றாவது இடத்தில் உள்ளது. கூட்டணிக் கட்சி தலைவர்கள் திமுகவுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்த நிலையில் திமுக தட்டுதடுமாறி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications