காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை: வைகோ
சென்னை: காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அறிவித்தார்.

தமிழ் மக்களின் நலனுக்காக கட்சி வேறுபாட்டை, கசப்புணர்வை மறந்து ஒன்றிணைந்து போராட தயாராக இருப்பதாக கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரும்போது மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் அதனைச் செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார். தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த மத்திய காங்கிரஸ் அரசோடு, திமுக கூட்டுக் குற்றவாளியாக இருந்தது என வைகோ சாடினார்.
அதனால், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது ஒரு ஏமாற்று வேலை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. எனவே இந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்குபெறாது என தெரிவித்தார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications