• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்ணாவின் அருகே துயில் கொள்ள சென்றார் கருணாநிதி.. கண்ணீருடன் விடை கொடுத்தது தமிழகம்!

By Shyamsundar
|
  முழு அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது- வீடியோ

  சென்னை: விடைபெற்றார் திமுக தலைவர் கருணாநிதி. மெரீனா கடற்கரையில், பேரறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெற்றது.

  5 முறை முதல்வராக இருந்த தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க சோகக் கடலில் மூழ்கிய நிலையில் இன்று உடல் நல்லடக்கம் நடைபெற்றது.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  இன்று மாலை அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. லட்சோபம் தொண்டர்கள் புடை சூழ தனது பாசத்துக்குரிய அண்ணனின் இருப்பிடம் நோக்கி மெல்ல மெல்ல மக்கள் கடலில் மிதந்தபடி வந்து சேர்ந்தார் கருணாநிதி. சுமார் 2.30 மணி நேரம் இறுதி ஊர்வலம் நடந்தது.

  அண்ணா சமாதிக்கு வந்த பின்னர் முப்படையினர் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்திலிருந்து கீழே இறக்கினர். பின்னர் அவரது உடலுக்கு கருணாநிதி குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  அதைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குலாம் நபி ஆசாத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  அதன் பின்னர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் ராணுவ மரியாதை செலுத்தினார்கள். அதன் பின்னர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு அது மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  இதைத் தொடர்ந்து சந்தனப் பேழையில் சகாப்தாமாக வாழ்ந்து முடிந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு குடும்பத்தினரின் இறுதி மரியாதைகள் மற்றும் உணர்ச்சி வெள்ளத்திற்கு மத்தியில் பேழை மூடப்பட்டது. அழகிரி, ராசாத்தி அம்மாள் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், மகன் தமிழரசு, கனிமொழி, காந்தி அழகிரி ,முரசொலி செல்வம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் அஞ்சலி செலுத்தினார்கள்

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  அதைத் தொடர்ந்து சந்தனப் பேழை தோண்டப்பட்டிருந்த குழிக்குள் மெல்ல இறக்கப்பட்டு கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  கருணாநிதி உடல் நல்லடக்கத்தின்போது மனைவி ராசாத்தியம்மாள், மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுதனர். அத்தனை பேரும் பெரும் வேதனை, சோகத்தில் மூழ்கி உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்தும், ஆரத் தழுவியும் தேற்றிக் கொள்ள முற்பட்டனர்.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  கருணாநிதி வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரது கடைசி ஆசைப்படி, ''ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial

  லட்சோப லட்சம் தொண்டர்கள், மக்களின் கண்ணீர் மற்றும் வீர வணக்கங்களுடன் விடை பெற்று தனது மனம் கவர்ந்த அண்ணாவிடம் ஓய்வு பெறச் சென்று விட்டார் இந்த ஓய்வறியா உதயசூரியன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  மேலும் stalin செய்திகள்View All

   
   
   
  English summary
  DMK leader Karunanidhi body buried in Marina near Anna Memorial.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more