For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக முதல்வர் இருக்கையை 5 முறை அலங்கரித்த கருணாநிதி!

தமிழக முதல்வர் இருக்கையை திமுக தலைவர் கருணாநிதி 5 முறை அலங்கரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் இருக்கையை திமுக தலைவர் கருணாநிதி 5 முறை அலங்கரித்துள்ளார்.

அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர் திமுக தலைவர் கருணாநிதி. மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

இந்திய அளவில் அரசியல்வாதிகள் பெயரை எழுதும் நிச்சயம் எந்த பேனாவும் கருணாநிதியின் பெயரை எழுத மறுக்காது. தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளை அரசியலில் கழித்தவர் கருணாநிதி.

சட்டசபையில் காலடி

சட்டசபையில் காலடி

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக திமுக சட்டசபையில் அடியெடுத்து வைக்கவும், கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் தொடங்கவும் இதுவே வழிவகுத்தது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

கருணாநிதி தனது கடைசி காலம் வரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். 1957ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்.

40 ஆண்டுகள் திமுக தலைவர்

40 ஆண்டுகள் திமுக தலைவர்

1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ஐந்து முறை முதல்வர்

ஐந்து முறை முதல்வர்

தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.1969ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல் முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. இரண்டு முறை கருணாநிதி தலைமையிலனா ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது.

சமரசம் செய்த பெரியார்

சமரசம் செய்த பெரியார்

அப்போது கருணாநிதிக்கும் கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இடையே யார் முதல்வராக பொறுப்பேற்பது என்பது குறித்து கடும் போட்டி ஏற்பட்டது. தந்தை பெரியார் தலையிட்டு சமரசம் செய்து கருணாநிதியை முதல்வராக பொறுப்பேற்க வைத்தார்.

ஆட்சி கலைப்பு

ஆட்சி கலைப்பு

இதைத்தொடர்ந்து 1971 - 1976 ஆம் ஆண்டு கருணாநிதி இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். இந்தமுறை கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் லஞ்சத்தை காரணமாக காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.

2006-2011 ஐந்தாம் முறை

2006-2011 ஐந்தாம் முறை

1989-1991 மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் கருணாநிதி. இதைத்தொடர்ந்து 1996-2001 ஆம் ஆண்டு நான்காம் முறை முதல்வராக அரியணையில் அமர்ந்தார். பின்னர் 2006-2011வரை ஐந்தாம் முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் கருணாநிதி.

English summary
DMK Leader Karunanidhi has decorated Tamil Nadu chief Minister seat for times. He contributed his 50 years in the Political life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X