வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது: கருணாநிதி
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது. தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும். என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது:
அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.

உடன்பிறப்பே, நான் இவ்வாறு கூறிவிட்ட தால், அளித்த நிதியே போதும் என்று நீங்கள் ஆறுதல் கொண்டு விடக் கூடாது. நான் முன்பே எழுதியது போல, நம்முடைய எதிரிகள் என்னென்னவோ செய்து கொல்லைப் புறமாகக் குவித்து வைத்துள்ள பெரு நிதியை எண்ணிப் பார்த்து, தேர்தல் வருவதற்கு இன்னும் இருப்பது ஒரு சில மாதங்களே, அது ஒவ்வொரு தமிழனுடைய தலை எழுத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தல், அதில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், நான் கேட்டவுடன் இல்லையென்று மறுக்காமல் அள்ளிக் கொடுக்கும் உடன்பிறப்புகள் என்னோடு இருக்கிறீர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன். எனவே உங்களிடம் கேட்காமல் இந்த நேரத்தில் நான் வேறு யாரிடம் சென்று கேட்க முடியும்? பணக்காரர்களிடம், தொழில் முதலாளிகளிடம், பல கோடி ரூபாய் வைத்திருப்போரிடம் நான் தேர்தல் நிதி கேட்டுப் பழக்கப்பட்டவன் அல்ல. உடன்பிறப்பே, உன்னிடம்தான் நான் திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறேன்.
நீயும் தவறாமல் கொடுத்துக் கொண்டே வருகிறாய். ஆனால் நம்முடைய எதிரியிடம் குவிந்திருக்கும் பண பலத்தை எண்ணிடும் போது, இப்போது நீ கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, நாட்கள் இன்னும் சிலதான் இருக்கின்றன என்பதையும் மனதிலே கொண்டு, வெட்டி வா என்றால், கட்டி வரும் உள்ளத்தோடு பெருநிதியைக் கொண்டு வந்து கழக நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் இன்றிலிருந்தே நீ முனைப்புக் காட்டிட வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து தொடர்ந்து நேரம்
கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை கழகம் பெற இருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications