ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்ததலைவர்: தீபக் பரபர.. அதிமுகவினர் அதிர்ச்சி!
ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்த தலைவர் என தீபக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்த தலைவர் என தீபக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை வழிநடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளே போதும் தினகரன் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் பசங்களான தீபா மற்றும் தீபக்கால் இன்று போயஸ் கார்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் மோதலால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சசிகலா கும்பலோடு சேர்ந்துக்கொண்டு தீபக் பணத்துக்காக தனது அத்தையான ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக தீபா குற்றம்சாட்டினார். மேலும் தன்னை திட்டமிட்டு போயஸ்கார்டனுக்கு வரவழைத்து கொல்ல முயன்றதாகவும் அவர் கூறினார்.

ஒப்புக்கொண்ட தீபக்
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபாவின் சகோதரர் தீபக், தான்தான் தீபா அழைத்ததாக ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவின் படத்துக்கு பூஜை செய்யவே தீபாவை அழைத்ததாகவும் அவர் கூறினார்.

தினகரன் தேவையில்லை
மேலும் தமிழகத்தை வழிநடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளே போதும் என்றும் தீபக் கூறினார். ஈபிஎஸ் ஆட்சி சிறப்பாக உள்ளது என்றும் தீபக் புகழாரம் சூட்டினார்.டிடிவி தினகரன் தமிழக அரசியலுக்கும் அதிமுகவுக்கும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

எம்ஜிஆர் பெயரில் ஏன்?
மேலும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் பெயரில் மாதவன் ஏன் கட்சி ஆரம்பித்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமரிடம் முறையிட முடியுமா?
இந்த மோதல் குறித்து பிதமரிடம் முறையிடப் போவதாக தீபா தெரிவித்துள்ளார் என்று கூறிய அவர், குடும்ப சண்டையை எப்படி பிரதமரிடம் முறையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தீபாவும் தானும்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அவர் கூறினார்.

எல்லா சொத்துக்களும் எங்களுக்குதான்
1991ஆம் ஆண்டுக்கு முன் ஜெயலலிதா வாங்கிய அனைத்து சொத்துகளும் தங்களுக்குதான் என்றும் அவர் கூறினார். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற முடிவு செய்தால் ஆதரிப்பேன் என்றும் அவர் கூறினார்.

கருணாநிதி தான் சிறந்தவர்
மேலும் ஜெயலலிதாவை விட திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தலைவர் என்றும் அவர் கூறினார். தன்னை ஜெலலிதாவின் அரசியல் வாரிசு எனக் கூறிக்கொள்ளும் தீபக் ஜெயலலிதாவின் பரம அரசியல் எதிரியான கருணாநிதியை சிறந்த தலைவர் என கூறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications