கருணாநிதி நலமுடன் இருக்கிறார்.. சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ், ஜெயக்குமார் தகவல்!
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என அவரை சந்தித்த துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என அவரை சந்தித்த துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சால் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
மேலும் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுப்பதால் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கோபாலபுரம் இல்லத்தில்
இதைத்தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஓபிஎஸ் தகவல்
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார் என தெரிவித்தார்.

ஜெயக்குமார் தகவல்
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் என்றார். கருணாநிதியின் வீட்டில் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்தோம்.

அடையாளம் கண்டுகொண்டார்
கருணாநிதியை சந்தித்தது அரசியல் நாகரீகம் மற்றும் பண்பாடு. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர்களும் சந்தித்தனர். கருணாநிதி எங்களை அடையாளம் கண்டுகொண்டார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நாகரீக நிகழ்வு
அரசியல் களத்தில் அதிமுகவும் திமுகவும் எலியும் பூனையுமாக உள்ளபோதும் கூட அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என்றதும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் நாகரீக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

குவியும் தொண்டர்கள்
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார். மேலும் ஏராளமான திமுக தொண்டர்களும் கோபாலபுரத்திற்கு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications