40 கார்களில் பிரசாரம்… அமைச்சர், அதிமுக வேட்பாளர் மீது திமுக புகார்
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
ஏற்காடு தொகுதி தேர்தல் பார்வையாளர் பொன் முத்துராமலிங்கம், மூத்த தலைவர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வி.பி.துரைசாமி ஆகியோர் கையெழுத்திட்டு அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, சேலம் எம்.பி. எஸ்.செம்மலை, முன்னாள எம்.பி. பொன்னையன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 40 கார்களில் சென்று பிரச்சாரம் செய்தனர். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் ஆகும்.

இதுதொடர்பாக வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முற்றிலும் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதையே இது காட்டுகிறது. அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும். மேலும் அமைச்சர், அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications