பணக்காரர்களிடம் அல்ல தொண்டர்களிடம் நிதி கேட்ட கருணாநிதி: ஒரே மாதத்தில் ரூ.2.20 கோடி வசூல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் கட்சி தொண்டர்கள் தேர்தல் நிதிக்காக ஒரே மாதத்தில் ரூ. 2.20 கோடி அளித்துள்ளனர்.
2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க நான் பணக்காரர்களிடம் அல்ல கட்சி தொண்டர்களாகிய உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன். நீங்கள் தாராளமாக நிதி அளியுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 11ம் தேதி கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து திமுகவினர் கருணாநிதி மற்றும் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் தனித்தனியாக தேர்தல் நிதி அளித்து வருகிறார்கள். ஒரே மாதத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 99 ஆயிரத்து 376 வசூலாகியுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கருணாநிதியிடமும், ஸ்டாலினிடமும் நிதி வழங்கி வருகிறார்கள்.
முன்னதாக ஸ்டாலின், பொதுச் செயலாளர் க. அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் கருணாநிதியை சந்தித்து தலா ரூ.1 லட்சம் நிதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணலை சனிக்கிழமை ஸ்டாலின் நடத்தினார். அப்போது நேர்காணலில் கலந்து கொள்ள வந்தவர்கள் ஸ்டாலினிடம் தேர்தல் நிதி அளித்தனர்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications