‛வாயை மூடு’.. குறை சொன்ன பெண்ணிடம் சட்டென கூறிய அமைச்சர் பொன்முடி.. வூட்டுக்காரர் பாவம் என கமெண்ட்
சில வினாடிகள் யோசித்த அமைச்சர் பொன்முடி சிரித்தபடியே, ‛‛வாயை மூடிட்டு இரு’’ எனக்கூறி சிக்னல் காட்டியது விவாதத்தை கிளப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மேடையில் பேசினார். அப்போது குறையை சொன்ன பெண்ணிடம், ‛‛வாயை மூடிட்டு இரு' என சிரித்தபடியே கூறி சிக்னல் காட்டிய அமைச்சர் பொன்முடி, வூட்டுக்காரர் எங்கே? என கேள்வி கேட்டு பாவம் என்று கமெண்ட் அடித்த வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திமுக ஆட்சியை பிடித்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
இதுபற்றி அமைச்சர் பொன்முடி பேசியபோது, ‛‛ஓசி'' என்ற சொல்லை பயன்படுத்தினார். இது கடந்த ஆண்டு பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

சமீபத்திய சர்ச்சை
இதையடுத்து சமீபத்தில் அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது சில பெண்கள் குடிநீர் வருவதில்லை என கூறினர். இந்த வேளையில் கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி ‛‛அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்... நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும்" என பேசியது சர்ச்சையை கிளப்பியது.

பொன்முடி பேச்சு
இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடியின் இன்னொரு செயல் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கவனித்து செய்ய கூறினார். மாவட்ட ஆட்சியர் கூறியதுபோல் இங்கு அரசு கலை கல்லூரி வந்துள்ளது. இதுதவிர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எல்லோரும் வளர வேண்டும்
நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் தான் ஆகிறது. கிராமங்கள், நகரங்களிலும் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. எனது நண்பரான உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு மூலம் நகரங்கள், கிராமங்களில் எல்லா வகையான பணிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி எல்லோரும் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகிறது'' என பேசினார்.

‛வாயை மூடிட்டு இரு’ என சிக்னல்
இந்த வேளையில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் குறைகள் உள்ளதாக தெரிவித்தார். இதை எதிர்பாராத அமைச்சர் பொன்முடி, ‛‛குறைகள் இருக்கிறதா?'' என வினவினார். அதன்பிறகு சில வினாடிகள் யோசித்த பொன்முடி சிரித்தபடியே, ‛‛வாயை மூடிட்டு இரு' எனக்கூறி சிக்னல் காட்டினார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் சிரித்தனர். இதனால் சிரிப்பலை எழுந்தது.

‛வூட்டுக்காரர் பாவம்’ என கமெண்ட்
மேலும் அமைச்சர் பொன்முடி, ‛‛வூட்டுக்காரர் வந்து இருக்கிறாரா?'' என கேள்வி கேட்க, ‛‛போய்விட்டார்'' என பதில் வந்தது. இதைக்கேட்ட பொன்முடி ‛‛போய்ட்டாரா.. பாவம்'' என கூறி சிரித்தார். அதன்பிறகு அமைச்சர் பொன்முடி ‛‛விடுங்க.. விடுங்க.. அவர் குறையை சொல்லி இருக்கிறார்'' என சிரித்தபடி தொடர்ந்து பேசி சமாளித்தார். இந்நிலையில் பொன்முடி பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications