இன்னைக்கு சட்டசபைல ஒரே பாராட்டுதான் போங்க.. துரைமுருகன் யார பாராட்டியிருக்கார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சண்முகத்துக்கு துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது குறிப்பில்லாமல் அமைச்சர் சண்முகம் பேசியதற்கு துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விவாதத்தின் போது அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பில்லாமல் பேசியுள்ளார்.

DMK MLA Duraimurugan praises ADMK minister CV Shanmugam

இதற்கு திமுக எம்எல்ஏ துரைமுருகள் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகளை உள் வாங்கி குறிப்பில்லாமல் பதில் தர வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

துரைமுருகன் பாராட்டை அனைத்து உறுப்பினர்களும் மேசையை தட்டி வரவேற்றனர். முன்னதாக பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன்தான செயல்படும் அமைச்சராக உள்ளார் என திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK MLA Duraimurugan praises ADMK minister CV Shanmugam. Duraimurugan praised him for answering without hints paper.
Please Wait while comments are loading...